Categories
தேசிய செய்திகள்

நான் யார் தெரியுமா….? விமானத்தில் தீவிரவாதி…..? அதிர்ந்து போன பயணிகள்…..!!

விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட பயணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக பயணி ஒருவர் கூறி சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜியா உல் ஹக் என்ற அந்தப் பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர் என்பது தெரிய வந்தது.

கோவாவில் விமானம் தரை இறங்கியதும் ஜியா உல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் டெல்லியில் இருக்கும் இன்ஸ்டீட் ஆஃ ஹுமன் பிஹேவியர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து வருவது உறுதியானது.

விமானத்தில் இருந்த அவர் தன்னை காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரி என்று கூறி விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக கூறியுள்ளார் இதனால் பயணிகள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது காவல்துறையினரிடம் விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனைக்கு பின் பனாஜியில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்காலஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Categories

Tech |