Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா?…. வாலிபரிடம் பணம் பறித்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வாலிபரிடம்  பணம் பறித்து  சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள என்.கே. தாங்கல்  கிராமத்தில் வில்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4- ஆம் தேதி தொட்டியாந்தொழுவம் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து  கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வில்வநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் ஏன் இந்த பக்கம் வந்தீர்கள். நான்  யார் தெரியுமா? என கூறியுள்ளார்.

மேலும் அவர் தான் போலீஸ் என கூறி வில்வநாதனிடம் இருந்த 5 ஆயிரம்  ரூபாய் பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளார். இதனை வில்வநாதனின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அதன்பின்னர் காவல் நிலையத்தில் வீடியோ காட்சியுடன் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போலீஸ் என மிரட்டல் விடுத்து வில்வநாதனிடம் இருந்து  பணத்தை பறித்து சென்றது பையூர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |