Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மீண்டும் முதல்வராக வருவேன்… உங்களுக்காக… முதல்வர் ஈபிஎஸ்…!!!

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு நான் மீண்டும் முதல்வராக வருவேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ” தமிழகத்தில் உள்ள மக்களின் மகத்தான ஆதரவோடு நான் மீண்டும் முதலமைச்சராக வருவேன். அப்போது அடிக்கல் நாட்டப்பட்ட அத்திக்கடவு மற்றும் அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தேன். விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டுவந்துள்ளது.

அதுமட்டுமன்றி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுக மட்டுமே. அப்போது கலைஞர், இப்போது ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை. வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |