Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றேன்…. “சினிமாவில் அதுக்கு மட்டும் தான் முக்கியத்துவம்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

தான் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் கபாலி, வெற்றிச்செல்வன், தோனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சென்ற 2005ஆம் வருடம் இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, சினிமாவில் திறமையை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர்.

ஒரு பெண் இளமையாக இருக்கும் பொழுது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. ஆனால் முப்பது வயதை கடந்துவிட்டால் அவளின் தோற்றம் கேள்விக்குள்ளாகிறது. மேலும் பட வாய்ப்புகளும் குறைந்து விடுகிறது. 30 வயதாகியும் சினிமாவில் நடித்து வருவதால் அவருக்கு வயதாகிவிட்டது என கூறுகின்றார்கள். இதனால் நடிகைகள் இளமையாக இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றார்கள். நான் பல திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகிய நிலையில் என்னை நீக்கி விட்டு வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்கின்றார்கள். இதனால் பல பட வாய்ப்புகள் என்னை விட்டு சென்றுவிட்டது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் நான் இருக்கின்றேன். சினிமாவில் அழகுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் பல திறமையான நடிகைகள் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |