பிரித்தானிய இளவரசர் வில்லியம் தான் தனது பாட்டியாருக்காக துக்கம் அனுஷ்டிப்பதால் தனது பொறுப்பு ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு வழங்கியுள்ளார். அதை சற்றும் எதிர்பாராத ஜெசிந்தா நான் அவருக்கு சற்றும் இணையில்லை என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தொடர்பான நிகழ்சிகளில் ஒன்றான Earthshot prize innovation summit என்னும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் தனக்கு பதிலாக பங்கேற்குமாறு இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவை அறிமுகம் செய்து வைத்து பேசிய நியூயார்க் மேயரும் பெரும் செல்வந்தருமான Mike Bloomberg ஜெசிந்தா பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை ஒரு உலக தலைவர் ஒரு மேம்பட்ட உலகை கட்டி எழுப்புவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து உரையாற்றிய ஜெசிந்தா தனது உரையின் போது மிகவும் தாழ்மையுடன் நான் பிரித்தானிய இளவரசருக்கு எந்த வகையிலும் இணை இல்லை. ஆனாலும் தற்போது அவர் தன் குடும்பத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை நாம் அனைவரையும் அறிவோம் என கூறியுள்ளார்.