Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன்…. தீ குளித்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

9-ஆம்  வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 9-ஆம்  வகுப்பு படிக்கும் சஞ்சய் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கடந்த 2  நாட்களாக பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை  கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்து சஞ்சய் நேற்று முன்தினம் மொட்டை மாடியில் வைத்து உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்து அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |