Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் நடித்த திரைப்படங்களை நானே பார்க்க மாட்டேன்”…. சினிமா அனுபவங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்…!!!!!

சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகின்றார். இவர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த சர்க்காரு வாரி பட்டா திரைப்படம் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்கள் பற்றி கூறியதாவது, என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்பதியை தந்ததில்லை. நடிப்பின் மீது எனக்கு இருக்கும் ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கும் முன் நினைத்துக் கொள்வேன். நடிகையாக அனைத்து விதமான வேடத்திலும் நடிக்க வேண்டும்.

அதே போல வணிக ரீதியாக அந்த படங்கள் வெற்றியடைய வேண்டும். அப்போதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான திருப்தி கிடைக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் தான் எனக்குள் உள்ள திறமையை வெளியே கொண்டுவந்து ரசிகர்களிடையே வெளிப்படுத்த முடியும். நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படி பார்த்தால் என் நடிப்பில் உள்ள நிறைய தவறுகள் எனக்கு தெரியும். இன்னும் நன்றாக நடித்து இருக்க வேண்டும் என தோன்றும் என கூறியுள்ளார்.

Categories

Tech |