Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் தீராத பசியில் இருக்கின்றேன்……கர்ஜித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!!!

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார் .

500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜேம்ஸ்ஆண்டர்சன் . இவர்  பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது .ஜேம்ஸ் ஆண்டர்சனின் தற்போது வயது 38 ஆகும். இவர் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.கொரோனாவிற்கு பிறகு இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டிகளிலும்  விளையாடியது . இதில் ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

தற்போது ஓய்வு குறித்து அவரிடம் கேட்டபோது நான் இன்னும் விக்கெட் வீழ்த்தும் பசியுடன் இருப்பதாகவும், என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ அதுவரை நான் விளையாட போவதாகவும், தற்போது  ஓய்வு பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிற்கு எதிரான முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றும் அது எனக்கு மிக மோசமான போட்டியாக அமைந்தது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் . நான் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை வாங்கி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதுவரை நான் 154 போட்டிகள் விளையாடியுளேன் . ஆனால், எனக்கான ஆட்டங்கள் இன்னும் இருக்கின்றன என உணர்கிறேன்’’ என்றார்.

 

Categories

Tech |