தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் நடிகை நித்யா மேனன் திமிர் பிடித்தவர்,அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய நித்தியா மேனன், நான் மிகவும் திமிர் பிடித்தவள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் விரும்பியபடி நான் செய்யாத போது எனக்கு எதிராக பொய்களை பரப்புகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார் m