யாரையும் மிரட்டாமல் மக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூருக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் தொழிலதிபராக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், யாரிடமும் காசு வாங்காமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் யாரையும் மிரட்டாமல் மக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் என்பது பாஜக நிர்வாகிகளின் நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், தான் கூட மாநிலத் தலைவர் என்று சொல்வதில்லை. மாநிலத்திற்கும் சேவை செய்யும் ஒரு சேவகன் என்றுதான் சொல்கிறேன் என்று கூறினார்.