Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தப்பி இருக்க முடியாது…! தேர்தலில் படாதபாடு படுத்தினாங்க… கவனமா இருக்க சொன்ன சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே போகும் போது அதற்கேற்ப நாம் வசதிகளை பெருக்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடினம். நான் அன்பாக வேண்டுவது இது அரசின் கடமை, இது மருத்துவர்களின் பணி என்று பேசிக் கொள்வது சரியல்ல. என்னுடைய பாதுகாப்பு சமூகத்தின் பாதுகாப்பு, நாம் கவனமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை கழுவிக் கொள்வது. இரண்டாவதாக நான் என் அன்பு மக்களிடம் சொல்வது கருஞ்சீரகம் அதை பயன்படுத்துங்கள்.

மிளகை புழுங்கல் அரிசியோடு சேர்த்து மென்று மென்று முழுங்குங்கள், ஒரு நாளைக்கு மூன்று வேளை யாவது செய்யுங்கள். அப்படி செய்தால் அது எந்த நோய் தொற்றையும் உள்ளே விடாது. நான் அதை தான் செய்கிறேன். இல்லையென்றால் நான் தப்பித்து இருக்க முடியாது. தேர்தலில் என்னை என்ன பாடு படுத்தினார்கள் என்று தெரியும். தேர்தலில் கை கொடுக்கவில்லை என்றால் கோபப்படுகிறான்.

கைகொடு அப்பொழுது தான் உனக்கு ஓட்டு போடுவேன் என்று சொல்கிறான். முக கவசம் கழற்று அப்பொழுதுதான் முகம் தெரியும் என்று சொல்கிறான். கொரோனா  என்று சொன்னால் அது எல்லாம் நமக்கு வராது என்று சொல்கிறான். கொரோனா  பரவலை தடுக்க வெந்நீரை கொஞ்சம் அதிகமாக குடியுங்கள். அப்புறம் இந்த நோய் எதிர்ப்பு திறனை கூட்டுகின்ற நம் பாரம்பரிய உணவு முறைகள் இருக்கிறது. அதை கொஞ்சம் கடைபிடியுங்கள்.

நாட்டுக்கோழி சாறு குடியுங்கள், மிளகு ரசம் குடித்துக் கொண்டே இருங்கள், முட்டை, காய்கறி உணவு, பழங்கள் இப்படி நோய் எதிர்ப்பு திறனை கூட்டுகின்ற உணவுகளை வைத்துவிட்டு கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். என் பாதுகாப்பு என் நாட்டின் பாதுகாப்பு என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும்.  இது  யாரோ ஒருவரின் வேலை என்று நினைத்தால் ஒண்ணுமே செய்ய முடியாது.

நம் தன்னலத்தில் தான் பொதுநலம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு, கூடுமானவரை நம்மை தான் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்புடன் சமூக பாதுகாப்பாக மாறும். அதுதான் நான் அன்பாக வேண்டுவது. கவனம் இல்லை என்றால் அரசு செய்ய தவறிவிட்டது, டாக்டர் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வது வேலை இல்லை. நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |