Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் சொல்லி இருந்தேன்… இப்போதாவது செஞ்சீங்களே…. ட்விட் போட்டு கொண்டாடும் ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே தொடரும் என புதிய பாடத்திட்டம் முறை ரத்து செய்யப்படுவதாகவும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய அரசாணையின்படி ஆறு பாடங்கள் என்ற பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரசாணையை பகிர்ந்துள்ள முக.ஸ்டாலின், குளறுபடியானது – ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி! என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |