பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமூகவலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருந்து வரும் ஷிவாங்கி அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிவருகிறார். அதன்படி, நீங்கள் செய்வது cringe மற்றும் ஓவர் ஆக்ட்டிங்காக உள்ளது என கூறினால் உங்கள் ரியாக்ஷன் எவ்வாறு இருக்கும் ..? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஷிவாங்கி, இவ்வாறு தான் இருக்கும் என எமோஜி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். மேலும் ஷிவாங்கி பேசியதாவது “நான் நெகடிவ் கமெண்ட்டுகளை பார்ப்பதில்லை. அதையெல்லாம் கேட்டு உணர்ச்சியற்றவளாக மாறி விட்டேன். முன்னதாக அதனை நினைத்து நான் வருத்தப்படுவேன். ஆனால் தற்போது பழகி விட்டது” என்று கூறினார்.
😅😅😅
This is the reaction #sivaangi https://t.co/6lgkIvnuuZ— Sivaangi Krishnakumar (@sivaangi_k) December 15, 2022