சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து மக்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீட்டில் இழுபறியும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மன்சூர் அலிகான் விலகி தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய முடியாத காரணமாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.