கனடாவின் மர்காம் நகரில் உள்ள தெருவிற்கு ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரகுமான் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகே இசை புயல் ஏ ஆர் ரகுமான் போஸ் கொடுத்திருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. கனடா நாட்டின் மர்காம் நகரின் தெருவிற்கு ஏ ஆர் ரகுமான் பெயர் சூட்டுவது இது முதன்முறை அல்ல எனவும் ஏற்கனவே கடந்த 2013 ஆம் வருடம் அல்லாஹ் ரெகா ரஹ்மான் என ஏ ஆர் ரகுமான் பெயரை ஒரு தெருவிற்கு சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சூழலில் இரண்டாவது முறையாக ஏ ஆர் ரகுமானுக்கு கனடாவில் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இரு ஆஸ்கர்களை ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்து தந்த ஏ ஆர் ரகுமான் பெயரில் கனடாவின் இரு தெருக்கள் இருக்கிறது என்பதை அறிந்த ரசிகர்கள் பெருமிதமாக அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக ரகுமானின் ட்விட்டர் பதிவில் நான் இதை ஒருபோதும் எனது வாழ்நாள் எதிர்பார்த்ததில்லை உங்கள் எல்லோருக்கும் மர்கான் நகர மேயருக்கும் நன்றி உணர்வுடன் இருப்பேன். மேலும் இசையமைக்கும் பணியில் இருந்து ஓய்வு பெறாமல் பொறுப்புடன் உழைக்க இது ஊக்கமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டு இருக்கிறார்.