மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காவல்துறை அதிகாரி பதிலளித்தது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக பணியாற்றி வரும் அமிதாப், அடிக்கடி சமூக ஊடகங்களில் நேரலையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிவார். அப்படி நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு இளைஞன் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆனால் அந்த பெண் என்னை ஏற்க மறுக்கிறார். எனவே அவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என்று கேள்வி கேட்டார்.
இதற்கு சற்றும் கோபப்படாமல் பதிலளித்த அமிதாப் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் எங்களால் உங்களுக்கு உதவ முடியாது. நீங்கள் அவர் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. ஒருவேளை அந்தப் பெண் உங்களை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டால் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று பதிலளித்தார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலானது.