புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது வரை அந்த தொகை மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் நிவாரணம் வழங்குமாறு காரைக்காலை சேர்ந்த நபர் முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த கேள்விக்கு, பதிலளித்த ரங்கசாமி தான் மட்டும் ராஜாவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் தனக்கு மேலும், கீழும் பல்வேறு அமைச்சர்கள் இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.