நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பால் குறித்து வெளியிட்ட யூடியூப் காணொளி தற்போது வைரலாகி வருகிறது
நடிகை வனிதா தனது குழந்தைகள் மற்றும் பீட்டர் பாலுடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவா சென்று இருந்தார். அங்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வனிதா முதல்முறையாக இந்த பிரச்சினை குறித்து கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பீட்டர் பால் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். சுற்றுலாவில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட்டோம். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு எங்கே இருக்கிறார் என்பது தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=cSnI0FE9za8&feature=youtu.be