ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என இளைஞர் கேட்ட கேள்விக்கு காவல்துறையினர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா கோரதாண்டவம் ஆடிவருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இளைஞர் ஒருவர் தன் காதலியை பார்க்க வெளியே செல்ல வேண்டும் என ட்விட்டரில் காவல் துறையினரிடம் கேட்டுள்ளார். அதற்கு காவல் துறையினர் இதுதான் உங்களுடைய தேவை என்பது எங்களுக்கு புரிகிறது ஆனால் உங்களது தேவை எங்களது அத்தியாவசிய பட்டியலில் வரவில்லை. அதனால் உங்களால் வெளியே செல்ல முடியாது. நீங்கள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ சில காலம் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர். காவல்துறையினரின் இந்த பதில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.