சிறுமியை ஏமாற்றிய வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரபு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த 15 சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். ஆனால் பிரபு வேலையை விட்டு விட்டு தற்போது தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார்.
ஆனால் அந்த சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பிரபுவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.