சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காம்பட்டு கிராமத்தில் சம்பந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வின்குமார் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர்.