Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் உன்னை காதலிக்கிறேன்”….. மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாணவியை  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனங்க்கால் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர்  வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கல்லூரி 3-ஆம் ஆண்டு படிக்கும்  மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து வட இலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி பகுதியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஆனால் சிலம்பரசன் அந்த மாணவியை  திருமணம் செய்து கொள்ள  மறுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  அந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிலம்பரசனை   கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |