Categories
தேசிய செய்திகள்

நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்… என்கூட வாங்க… உதவி செய்வதாக கூறி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்த கொடூரம்…!!!

கேரள மாநிலம் தொவரிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் என்பவர் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பண உதவியும் கேட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் பண உதவி செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அந்த பெண்ணையும் அவரது மகனையும் அழைத்துச் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து வேறுவேறு அறையில் தங்க வைத்துள்ளனர்.

பின்னர் அவருடன் வந்திருந்த அவரது நண்பர்களான பசல் மகபூப், செய்பு ரகுமான் ஆகியோர் அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை நான்கு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதை வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |