உக்ரைனுக்கு நான் செல்வேனா என்று எனக்கே தெரியாது என பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதில் அளித்துள்ளார்.
உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அதிபர் ஜோ பைடன் நான் அங்கு செல்வேனா என்று எனக்கே தெரியாது என பதிலளித்துள்ளார்.