முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் முதலமைச்சர் படித்த கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “நான் இங்கு சி.எம். ஆக வரவில்லை. ஒரு நல்ல மாணவனாக வந்துள்ளேன். இந்த பள்ளியில் எனது சகோதரர்கள் முத்து, அழகிரி ஆகிய 2 பேரும் படித்தார்கள். இதனால் எனக்கு அட்மிஷன் சுலபமாக கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நுழைவு தேர்வு இருக்கிறது.
அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெறவில்லை. இதனால் என்னை அவர்கள் சேர்க்க மறுத்து விட்டார்கள். அப்போது சென்னை மேயராக குலசேகர் இருந்தார். அந்த காலகட்டத்தில் மேயர் என்றால் அவர்களுக்கு வரவேற்பு, வெளிநாடு நிகழ்ச்சி, வெளிமாநில நிகழ்ச்சி என அதற்கே ஒரு வருடம் முடிந்து விடும். அப்போது ஒரு வருடம் தான் ஒரு மேயராக இருக்க முடியும் . ஆனால் இப்போது மேயர் வேலையெல்லாம் அப்படி இல்லை. 5 வருடம் மக்களோடு மக்களாக இருந்து பணி செய்தால் தான் முன்னேற முடியும்” என அவர் கூறியுள்ளார்.