Categories
மாநில செய்திகள்

“நான் அல்லாஹ்விடம் போறேன்”.. கணவர் சுதந்திரமாக இருக்கட்டும்… மகிழ்ச்சியுடன் இளம்பெண் அதிர்ச்சி முடிவு…!!

குஜராத்தில் சபர்மதி ஆற்றில் ஒரு இளம்பெண் சிரித்த முகத்துடன் காணொளி பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா மக்ரானி என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து காணொளியில் பேசுகிறார். அதில் நான் அடுத்த சில நொடிகளில் செய்யும் செயலுக்கு நானே பொறுப்பு என்றும் இதில் எவருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறுகிறார்.

மேலும் சிறிது காலமே உயிர் வாழ கடவுள் நமக்கு அனுமதி அளிக்கிறார். என் கணவர் ஆரிஃப்பிற்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. இதனால் அவருக்கு சுதந்திரம் அளிக்கபோகிறேன். நம் மீது யாரேனும் அன்பு கொள்ள வேண்டும் என்றால் நாமும் அவர்கள் மேல் அன்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

ஒரு பக்கத்திலிருந்து மட்டும் வரும் பாசத்தினால் எந்த பயனும் இல்லை. உங்களது வேண்டுதலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் இறுதியாக அல்லாஹ்விடம் செல்லப்போகிறேன் என்று கூறிவிட்டு சபர்மதி ஆற்றில் திடீரென்று ஆயிஷா குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் ஆயிஷா மற்றும் ஆரிஃப் கான் ஆகிய இருவரும் திருமணம் செய்துள்ளனர். எனினும் சிறிது நாட்கள் மட்டுமே திருமணம் முடிந்த மகிழ்ச்சி ஆயிஷாவிடம் தென்பட்டுள்ளது. கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு ஆயிஷாவை கொடுமை செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த ஆயிஷாவின் தந்தை 1.5 லட்சம் ரூபாய் பணம் ஆரிஃப்பிற்கு கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஆயிஷாவை மீண்டும் கணவர் வீட்டிற்கு அவரின் தந்தை அனுப்பியிருக்கிறார். எனினும் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதால் மறுபடியும் ஆயிஷா பிறந்த வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன்பு ஆயிஷா காணொளி பதிவு செய்து கணவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

Categories

Tech |