விஜய் யேசுதாஸ் மலையாளத்தில் பாடல் பாட மாட்டேன் என்று கூறியதாக எழுந்த சர்ச்சைக்கு நான் அப்படி கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளார்
பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தனுஷ் நடித்த படத்தில் வில்லனாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு மலையாளப் பத்திரிகை நிறுவனத்திற்கு இவர் பேட்டி அளித்த போது மலையாளத்தில் பாடல்கள் பாட மாட்டேன் என்று கூறியதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
மலையாளத்தில் தனது முதல் பாடலை பாடி அறிமுகமானவர், இனி மலையாளத்தில் பாட மாட்டேன் என்று கூறியதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் கோபம் கொண்டனர். இதனால் சமூக வலைத்தளத்தில் அவரை மோசமாக விமர்சித்து வந்தனர், இந்நிலையில் விஜய் யேசுதாஸ் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் நான் மலையாளத்தில் பாட மாட்டேன் என்று கூறவில்லை. பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடுவேன் என்று தான் கூறி இருந்தேன். நான் கூறியதை தவறாக திரித்து தலைப்பாக வைத்து விட்டனர் எனக் கூறினார்.