தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குலு குலு. இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் கிங் போல சந்தானம் களமிறங்கியுள்ளார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகர் சந்தானம் காமெடியராக மீண்டும் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளார்.நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நான் காமெடியனாக தான் இந்த சினிமாவிற்குள் வந்தேன். இப்போது கூட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகம் எடுத்தால் ஆர்யாவுக்கு காமெடியனாக நடிக்க நான் தயார். எனவே நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.