தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஸ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது வி கிரியேஷனஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேட்டத்தில் நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தனுஷிவின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி ‘நானே வருவேன்’ பட குழுவினர் தற்போது தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் வில்லுடன் தனுஷ் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.