நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்டு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.