இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். அத்துடன் இந்துஜா ரவிச் சந்திரன், யோகிபாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் “நானே வருவேன்” படக்குழு முழுவீச்சுடன் பின்னணி இசை ரெக்கார்ட் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதை நடிகர் தனுஷ் தன் சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.
#Naanevaruven Background score in full swing @thisisysr Magic pic.twitter.com/93f1zGDHjV
— Dhanush (@dhanushkraja) September 13, 2022