இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இதில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு போன்றோர் முக்கியமான வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.
அத்துடன் இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் “நானே வருவேன்” படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் தனுசின் 2 வித்தியாசமான தோற்றங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Coming Soon in Theatres! #NaaneVaruven @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @RVijaimurugan pic.twitter.com/4bs8bw42kk
— Kalaippuli S Thanu (@theVcreations) August 22, 2022