Categories
சினிமா தமிழ் சினிமா

“நானே வருவேன் தனுஷின் கதை”…. பல உண்மைகளை போட்டுடைத்த செல்வராகவன்….!!!!!

நானே வருவேன் திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் செல்வராகவன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது.

தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் செல்வராகவன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் கூறியுள்ளதாவது, இத்திரைப்படத்தின் கதையை உருவாக்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் இந்த ஸ்கிரிப்டை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனுஷின் கதை என்பதால் நாங்கள் இருவரும் பல நேரங்களில் பல விவாதங்களை மேற்கொண்டு காட்சிகளை அமைத்ததாகவும் குழந்தையிலிருந்து நடிகராகவும் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் அவரின் பல வளர்ச்சிகள் என்னை வியப்படைய வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |