Categories
சினிமா தமிழ் சினிமா

‘நானே வருவேன்’ டைட்டில் மாற்றப்படுகிறதா?… தீயாய் பரவும் தகவல்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்‌.  இந்த படத்திற்கு ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் நானே வருவேன் படத்தின் டைட்டில் மாற்றப்பட இருப்பதாகவும் விரைவில் புதிய டைட்டிலை படக்குழு வெளியிடும் என்றும் தகவல் பரவி வருகிறது. நானே வருவேன் என்ற டைட்டில் மனதில் பதிந்துவிட்ட நிலையில் திடீரென  ஏன் டைட்டிலை மாற்றுகிறார்கள்? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் புதிய டைட்டிலை வெளியிடும்போது டைட்டில் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

Categories

Tech |