Categories
தேசிய செய்திகள்

நானும் படிக்கிறேன்….. பள்ளியில் சேர்ந்த புதிய மாணவன் இவன் தான்….. டிவிட்டரில் வைரல்….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை குரங்கு ஒன்று கவனித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த சம்பவம் எப்போது நடந்தது? என்பது குறித்து தகவல் வெளியாக இல்லை. அந்த குரங்கு மாணவர்களின் பின் வரிசையிள் சாதாரணமாக அமருகிறது.

இது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர்களோடு காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என்று குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

Categories

Tech |