Categories
உலக செய்திகள்

நானும் தான் குழந்தைக்கு தாய்.. நீதிமன்றம் சென்ற பெண்.. சூப்பராக தீர்ப்பளித்த நீதிபதி..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பெண்கள் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருவரின் பெயரும் இடம்பெற நீதிமன்றம் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ஒலிவியா, எலிசா என்ற இரண்டு பெண்கள் பில் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் எலிசா கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே குழந்தை பிறந்தால் அதற்கு இருவரும் தாயென்று தம்பதியருக்குள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

அதன்பிறகு எலிசாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒலிவியா மருத்துவ ரீதியாக தயாராகி குழந்தை பிறந்தவுடன் முதலில் அவர் தான் தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். இவ்வாறு மகிழ்ச்சியாக இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருந்ததுள்ளது. அப்போது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கும் சமயத்தில் தான் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது சட்டபடி, பில் மற்றும் எலிசா தான் குழந்தையின் பெற்றோர். எனவே பிறப்புச் சான்றிதழில் அவர்கள் இருவரின் பெயரை மட்டும்தான் சேர்க்க முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். சட்டமும் அவ்வாறே கூறிவிட்டது. மேலும் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தையாக பிறந்திருந்தால், மூன்று பேரின் பெயர்களையும் இணைக்கலாம்.

ஆனால் இயற்கையான முறையில் தானே குழந்தை பிறந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் ஒலிவியா நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அதிகாரிகள், பெற்றோர் பெயருடன் ஒலிவியாவின் பெயரையும் பிறப்பு சான்றிதழில் இணைத்தால் வருங்காலத்தில் அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாதிட்டுள்ளனர்.

ஆனால் நீதிபதி Sandra Wilkinson அதனை ஏற்க மறுத்து, பெற்றோர்கள் பலர் தங்களின் கடமையை சரியாக செய்யாமல் அதனை நிராகரிப்பதற்காக நீதிமன்றத்திற்கு வந்ததை பார்த்திருக்கிறேன். ஆனால் இவரோ தாய்க்கான பொறுப்பை பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார். ஒலிவியா, தாயாகத்தானே ஆசைப்படுகிறார் என்று கூறி மூன்று பேருமே குழந்தையின் பெற்றோர்கள் தான் என்று பதிவு செய்யவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

Categories

Tech |