நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பானது மீண்டும் குறைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 310 பேர் உயிரிழந்த நிலையில், 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 17 லட்சத்து 36 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினத்தை விட இன்று கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் குறைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,891 ஆக அதிகரித்துள்ளது.