Categories
அரசியல் மாநில செய்திகள்

நாட்டுக்கு விரோதமாக…! ”1இல்ல… 2இல்ல… 38அமைப்பு” … அமித்ஷாவுக்கு பறந்த தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  கிரிமினல் பாதிரியார் ஜெகத் கஸ்பர். இவர் ஏற்கனவே கிரிமினல். ஐநாவில் இவருக்கு எதிராக புகார் இருக்கிறது. இவர் சொல்கிறார் முஸ்லிம்கள் 40 சதவீத இடம் கேளு அப்படி என்று…. இன்றைக்கு என்னமோ நான் பிரிவினை பேசவில்லை என்று சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது… ஆனால் மண்டையில் நாங்கள் ஓங்கி அடிக்கவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலறுகிறார்கள்.

இந்த ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். என்று ஏற்கனவே கேட்டிருக்கிறேன், ஜெகத் கஸ்பரை கைது இன்னும் செய்யவில்லை. அப்படி என்றால் ஸ்டாலின் உடந்தை, ஸ்டாலின் சொல்லி ஜெகத் கஸ்பர்  பேசி இருக்கிறார் என்று மக்கள் சொல்கிறார். ஏன் சார் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவருக்கு முன்னாடி தானே சொல்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.

ஏனென்றால் ஏற்கனவே நான் 38 அமைப்புகள் ( அர்பன் நக்ஸல்ஸ்)  முஸ்லிம் ஜிகாதிஸ்ட், ஜெகத் கஸ்பர்  மாதிரி தனி நபர்களாக ( நாட்டு எதிரானவர்கள் ) என லிஸ்ட் மாண்புமிகு அமித்ஷா அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளேன் என தெரிவித்தார்.

Categories

Tech |