மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கின்றது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,ஊழலை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கடந்த எட்டு வருடங்களாக இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ அல்லது நிறுவனமோ தப்ப முடியாது.
ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல வரும் காலத்திலும் அனைத்து மட்டத்திலும் ஊழலுக்கு வாய்ப்பே கிடையாது.இந்தியாவில் அடுத்த 25 வருடங்களில் இந்தியா மாபெரும் நாடாக வளர்ந்த நாடாக மாறுவது ஒவ்வொருவரின் கடமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.