2020 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 2020 நாட்டியக் கலைஞர்கள் பரதம் ஆடி சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் மகளிர் விழிப்புணர்வுக்காக, 2020 மாணவிகள் பரதம் ஆடி சாதனை படைத்தனர்.
மகா சிவராத்திரி விழிப்புணர்வு குறித்த ‘குரு சமர்ப்பணம்’ என்ற பெயரில் நாட்டியாஞ்சலி பெருவிழா நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், 2020 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 2020 நாட்டியக் கலைஞர்கள் பரதம் ஆடி சாதனை படைத்தனர்.