ஜப்பான் நாட்டில் வட பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஹொக்கைடோ தீவு உள்ளிட்ட ஜப்பான் நாட்டின் வட பகுதி முழுவதும் கடும் பனி பொலிவு நீடிக்கிறது. சாலைகள்,மரங்கள் மற்றும் வீடுகளில் அடர்த்தியாக பனி படர்ந்துள்ளது மட்டுமின்றி 24 மணி நேரமும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக 78 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 60 சென்டி மீட்டருக்கு அதிகமான பனிப் பொழிவு இருக்கும் என வானிலை முன்னறிவிப்பு நிலையம் எச்சரித்துள்ளது பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.