நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் நிறுத்தபடாவிட்டால் மிக கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தது.
அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தில் எதிர் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளது. இதில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 வருடங்கள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.