பெரம்பலூர் அருகே காத்தாயி அம்மனுக்கு நாட்டார்மங்கலத்தில் வீதி உலா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் ஈஸ்வரன்-பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூமுனி, காத்தாயி அம்மன், ராயமுனி, செம்முனி, வேதமுனி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. அதன்பின் காத்தாயி அம்மனுக்கு, பச்சையம்மன் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
இந்த விழாவில் ஈச்சங்காடு, செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், மருதடி, சீதேவிமங்கலம், ஆலத்தூர் கேட், இரூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வீதி உலாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பக்தர்களின் பசியைப் போக்குவதற்கு அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடுகளை குடிபாட்டு மக்கள் மற்றும் நாட்டார்மங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.