Categories
தேசிய செய்திகள்

நாடே அதிர்ச்சி…. மனைவி, மகள் மீது கொதிக்கும் எண்ணெய்…. கணவனின் கொடூர செயல்…. பரபரப்பு….!!!!!

பெங்களூர் எல்.ஆர். நகரில் தாமஸ்-அந்தோணியம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி அன்று கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தாமஸ் தனது மனைவியைக் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

மேலும் தாமஸ் சமையல் அறைக்குச் சென்று ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து அதை தனது மனைவி மீது ஊற்றியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்தோணியம்மா துடித்துள்ளார். இதனைப் பார்த்த மகள் தாயைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

அதன்பின் இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாமஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |