நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தை அதிகமாக தேர்வு செய்கின்றனர். பயணிகளுடைய வசதிக்காக ரயில் நிலையங்களில் எக்ஸ்லேட்டர்கள் மற்றும் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த எட்டு மாதங்களில் ரயில் நிலையங்களில் 1099 லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தினமும் 25000 மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதால் அவர்களுடைய வசதிக்காக லிப்ட் வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 339 ரயில் நிலையங்களில் மொத்தம் 1090 எக்ஸ்லேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல 400 ரயில் நிலையங்களில் 981 லிப்டுகள் அமைக்கப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையத்தில் கூடுதலாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.