பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் மூலமாக மக்களுக்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்து உள்ளன.
எனவே உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் மூலமாக மக்களுக்கு செரிவூட்டப்பட்ட அரிசியை 2022ஆம் ஆண்டுக்குள் 3 கட்டமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 4270 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் மட்டும் பொது விநியோகத் திட்டம் மூலமாக செரிவூட்டப்பட்ட அரசு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி சென்றடைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.