இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. இச்சூழலில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியது. இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அடுத்த மாதத்திலேயே 4000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. Pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதாவது தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன.
இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 10வது தவணையில் இருமடங்கு நிதியுதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசு இந்ததிட்டத்தை உடனடியாக செயல்படுத்தினால் டிசம்பர் 15ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நான்காயிரம் ரூபாய் வந்து சேரும். அதனைப் போலவே இந்த திட்டத்தின் பயனாளிகள் கிசான் கிரெடிட் கார்டுகளையும் பெறலாம். இதன் மூலம் 3 லட்சம் வரையில் கடன் பெற முடியும். இதற்கு 4% மட்டுமே வட்டி. இந்த அறிவிப்பை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.