Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரேஷன் கார்டு திட்டத்தில் புதிய மாற்றம்?…. இனி இவர்களுக்கு பொருட்கள் கிடையாது…. ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும்,அரசு மானியம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிகவும் அவசியம்.

முதலில் ரேஷன் அட்டை பெறுவது மிகவும் சிரமமாக இருந்த நிலையில் தற்போது அந்தந்த மாநில அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக எங்கும் அலையாமல்  இருந்த இடத்தில் இருந்து கொண்டே ரேஷன் கார்டு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் தகுதியற்ற பலரும் ரேஷன் அட்டை மூலமாக பயன்பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதனால் தகுதியற்றவர் பயன்பெற முடியாத வகையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.எனவே அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.அதனால் இனி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரேஷன் உதவி கிடைப்பது மிகவும் சிரமம்தான்.அதுமட்டுமல்லாமல் கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா முழுவதிலும் 2.41 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |