Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள்…. ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களுடன் ஒப்பிடுகையில் ரயில் பயணத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் மக்கள் அதனையே தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் பயணிகள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு ஹெல்ப் லைன் எண்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிப்பதற்காகவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் அவசர தேவைக்காக உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை ரயில்வே அமைச்சகம் வைத்துள்ளது. இந்த உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை டிக்கெட் பரிசோதவர்களுக்கு பயன்படுத்த தெரிவிக்க வேண்டும் என ரயில்வே துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் அதற்கான பயிற்சிகள் டிக்கெட் பரிசோதகர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |