Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் தொடங்கிடுச்சு…. உற்சாகமாக பயணிக்கும் மக்கள் …!!

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று நாடு முழுவதிலும் உள்ள பெருநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லி, நொய்டா, லக்னோ மட்டும் சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் நுழைவதற்கு முன்னதாக, முக கவசம் அடைந்தும், கிருமிநாசினி தெளிக்கும் கருவிகள் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபின்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவில் உடல் வெப்பம் உடைய பயணிகள் மட்டுமே பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |